எண்.1
உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள்


எண்.2
காவிரி ஆற்றின் நீரை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்கள் எவை?

எண்.3
காவிரி நீர் பிணக்கில் மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் இடையே எந்த ஆண்டு முதல் ஒப்பந்தம் போடப்பட்டது?

எண்.4
மைசூர் அரசு கண்ணாம்பாடியில் கட்டிய அணையை மேற்கண்ட ஒப்பந்தத்தின் படி 11 டிஎம்சி கொள்ளளவில் கட்டமால் 41.5 டி.எம்.சி கொள்ளளவிற்கு கட்டியது. அந்த அணை இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

எண்.5
மைசூர் அரசிற்கும், சென்னை மாகாண அரசிற்கும் இடையே இரண்டாவது ஒப்பந்தம் எந்த ஆண்டில் போடப்பட்டது?

எண்.6
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு 1956-ஆம் ஆண்டில் ஒரு பிரிவு (262) இயற்றப்பட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது? அதன் விளக்கம் என்ன?

எண்.7
காவரி நதிநீர் சிக்கலை தீர்க்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட “காவிரி நடுவர் மன்றம்” எந்த ஆண்டில் அமைக்கப்பட்டது?

எண்.8
1991-இல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பின் படி தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரின் அளவு என்ன? இந்த தீர்ப்பை ஒட்டித்தான் கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான பெரும் கலவரம் நடந்தது

எண்.9
2007-ம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பு (ஆயிர்த்திற்கும் அதிகமான பக்கங்கள்) தமிழகம் - கர்நாடகாவிற்கு ஒதுக்கிய நீரின் அளவு என்ன?

எண்.10
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு இந்திய அரசின் அரசாணையாக (கெசட்டில்) எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

எண்.11
தமிழ்நாட்டில் பாயும் காவிரி நதி கீழ்க்கண்ட மாவட்டங்களில் எதில் ஓடவில்லை?